நாட்டில் திடீரென அதிகரித்த எரிபொருள் விலை - செய்திகளின் தொகுப்பு
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 371 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும். இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |