பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் வெளியான தகவல்
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட அண்மைய ஆய்வின் படி, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினருள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்புத்துறை தலைவர் மனோஜ் ஜினதாச தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஹெரோயின், ஐஸ், கொகெயின், ஹஷிஷ் மற்றும் கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்களை அடிக்கடி சோதனை செய்யும் போது ஏற்பட்ட தொடர்ச்சியான வெளிப்பாடு இதற்கு காரணமாக இருப்பதாக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்பு
எனினும் குறித்த அதிகாரிகள் மத்தியில் உள்ளூர் கஞ்சா பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றும் ஆய்வு கூறுகின்றது.
அதேநேரம் சில அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் மூலம் உடனடி மறுவாழ்வு திட்டங்களை ஆரம்பிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட ஆய்வு
இந்த ஆய்வின் இரண்டாம் கட்டம் பெப்ரவரியில் தொடங்கவுள்ளது. இதற்கிடையில், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், 400 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளின் சொத்துகள் குறித்து தனி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.