சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு
சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 320 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளாக தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டுமானத் தொழிற்சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில், கட்டுமானத் துறையை ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கிய வேளையில், சீமெந்தின் விலையுயர்வு, மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீமெந்துக்கு 3வீத வற் வரி
மேலும், சீமெந்தின் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என அபேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீமெந்துக்கு 3வீத வற் வரி விதிக்கப்பட வேண்டும். எனினும் உற்பத்தியாளர்கள் மூன்று சதவீதத்திற்கும் அதிகமான வரியை விதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் 50KG சீமெந்து பொதியொன்றின் விலையானது 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் நேற்றைய தினம் அறிவித்திருந்தனர்.
எனினும் தற்போது மீண்டும் சீமெந்து பொதியொன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |