இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணை தாக்குதல்: பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு
இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அமைப்பு பலத்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் வைத்து ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவர் ஷேக் சலே அல் அரூரியைக் கொன்றதற்கு பதிலடி நடவடிக்கையாக குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத் தளத்தின் மீது இன்று (06.01.2024) சனிக்கிழமை 60 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தி உள்ளது.
விரைவில் பதிலடி
குறித்த தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'சிறந்த தலைவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொலை செய்த குற்றத்திற்காக பதிலடி கொடுக்கவுள்ளோம்.
அதில் முதன்மைத் தாக்குதலாக இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தைக் குறி வைத்து 62 பலவகைப்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளோம் என ஹமாஸின் ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளது.
ஹெஸ்புல்லா தலைவர் ஹாஸன் நஸ்ரல்லா 'விரைவில் இதற்கான பதிலடி கொடுக்கப்படும்' என நேற்று (05) இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |