வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு டொலர்களை
தேடிக்கொடுப்பதற்காக பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகளில்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஈடுபட்டு வருகின்றார்.
எதிர்காலத்தில் இது நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என்பதை கருத்திற்கொள்ளாமல் அவர் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு வேலை தேடி எத்தனை இலங்கையர்கள் தீவை விட்டு வெளியேறினார்கள் என்பதை அவர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய 240,350 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர்.
இலங்கை பணியாளர்கள் மூலம், நாட்டுக்கு கிடைத்த பணம் கடந்த ஆகஸ்ட் மாதம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில் கடந்த மாதம் 359 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.