விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை
இயற்கை அனர்த்தங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்குமாறு முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) வலியுறுத்தியுள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் துரித நடவடிக்கை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 2018ஆம் ஆண்டு நான் விவசாய அமைச்சராக பதவியேற்றபோது வழங்கப்பட்ட 40,000 ரூபா கொடுப்பனவே தற்போதும் வழங்கப்படுகிறது.
இது தற்போதைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என செய்தியும் வெளியிடப்பட்டது.
ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 40,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கத்தில் தீர்மானம் எடுத்திருந்தோம்.
அதனை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
பாரிய அசௌகரியங்கள்
விவசாயிகள் இந்த அரசாங்கத்தில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த அரசாங்கத்துக்கு உர மானியத்தைக் கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எமது அரசாங்கத்தில் உர மானியம் 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.
நாங்கள் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தோம் என்றும் முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
