முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு- செய்திகளின் தொகுப்பு
அங்கவீனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 5,000 ரூபாவாக இருந்த அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு 7,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. 2,000 ரூபாயாக இருந்த முதியோர் கொடுப்பனவு 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசுமப் பயனாளி குடும்பங்களில் உள்ள அங்கவீனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்படவுள்ளனர்.
இவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஷேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
