யாழில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: வைத்திய நிபுணர் எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். அதனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.
சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதனால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால், அதனை பாவிக்கும் மற்றையவருக்கும் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.
இலங்கையில் தற்போது 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் இன்று வரை எயிட்ஸ் தொற்று உள்ளவர்கள் 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 3 பேரும் இந்த ஆண்டு நான்கு பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழங்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 19 மணி நேரம் முன்

இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. வெளியே கூறமுடியாத இஸ்ரேலின் மிகப் பெரிய இராணுவ இழப்பு News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
