மட்டக்களப்பில் பிரதான குளங்களின் நீர் மட்டங்கள் உயர்வு
மட்டக்களப்பின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதனால் தாம் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டங்களும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இன்று காலை 6 மணி வரையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 33 அடியாகவும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 6 அங்குலமாகவும், வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 19அடி 1 அங்குலமாகவும் உயந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில்
42.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின்
மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
