வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் நிதி அமைச்சரின் அதிரடி உத்தரவு
வருமான வரி செலுத்த தவறிய பல்வேறு தொழில்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று நிதியமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
வரி வசூல்
நாடு அரசாங்க வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தும் இவ்வேளையில், வரிகளை விதித்து வருமானம் ஈட்டுவது மற்றும் அவ்வாறு வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வரி வசூல், வெற்றிடங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
