கனடாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி வரம்புகள்
2025ஆம் ஆண்டில் கனடாவின் வருமான வரி வரம்புகளை கனடா வருவாய் நிறுவனம்(Canada Revenue Agency - CRA) மாற்றியமைத்துள்ளது.
குறித்த வருமான வரி வரம்புகள், பணவீக்கத்தை அடிப்படியாக வைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மூலதன ஆதாய வரி விகிதத்தை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்தற்கு அமைய, 250,000 கனேடிய டொலர்களை விட அதிக வருமானத்தை ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விகிதம் ஒரு பங்கு முதல் இரண்டு பகுதிகளுக்கு உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு தனிநபர் வருமான வரி வரம்புகள்
- $57,375 அல்லது அதற்கும் குறைவானவர்க்கு– 15%
- $57,375 முதல் $114,750 வரை – 20.5%
- $114,750 முதல் $177,882 வரை – 26%
- $177,882 முதல் $253,414 வரை – 29%
- $253,414-க்கு மேல் – 33%
ட்ரூடோ பதவி விலகல்
எனினும், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதோடு இந்த வரி உயர்வு சட்டமாகவும் மாறவில்லை.
தற்காலிகமாக, 'CRA' முன்மொழிந்த வரி உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், இது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, இந்த மசோதா மீண்டும் அனுமதிக்கப்படலாம்.
எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் லிபரல் கட்சி தோல்வியடைந்தால், வருமான வரியை மாற்றியமைக்கும் முயற்சியும் தோல்வியடையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |