நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களில் அதிகரிக்கும் திருட்டுச்சம்பவங்கள்
அண்மை காலமாக நுவரெலியா நகரில் வாகனங்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவிற்கு நாள்தோறும் பொது மக்கள் உட்பட ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் நுவரெலியா மாநகசபையினால் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு திரும்பும் வேளை மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்தும் தலைக்கவசம் , பக்கவாட்டு கண்ணாடி, வாகனங்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்கள், பயணப்பை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், உந்துருளி, முச்சக்கர வண்டி, மகிழுந்துகள் போன்றவற்றிலே போலி வாகன சாவிகளை பயன்படுத்தி அதிகம் களவாடப்படுகின்றமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடு பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் அதிகமாக நுவரெலியா நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாகவும் , பிரதான நகரில் உள்ள மணி கோபுரத்திற்கு முன்பாகவும் , நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களிலே பொருட்களும் , வாகன உதிரிபாகங்களும் களவாடப்படுவதால் வாகன உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுபிறது.
இந்நிலையில், வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நுவரெலியா மாநகர சபை ஊடாக பணம் அறவிடப்படுகின்ற போதிலும் உரிய பாதுகாப்பு இல்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
