திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நிகழ்ந்த சம்பவம்
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனக்கு முறைப்பாடு கிடைத்ததாக தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச். தாலிப் அலி கடந்த வாரம் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஹஷீம் குழுவினரின் சத்தியப்பிரமாண சீசீடிவி காணொளிகள் அழிக்கப்பட்டுள்ளன! பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
மக்களின் அவல நிலை
தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை என்பது அனைத்து தம்பலகாம மக்களுக்கும் பொதுவான வைத்தியசாலையாக இயங்கி வரும் நிலையில், அங்கு கடமை புரியும் வைத்தியர்கள் அங்கு வரும் நோயாளர்களை எங்கிருந்து வருவதாக விசாரணை செய்கிறார்கள்.

சிறாஜ்நகர் தொடக்கம் 95 ஆம் கட்டை வரையிலான பகுதிகளில் உள்ளவர்கள் வந்தால் உங்களுக்கான வைத்தியசாலை இதுவல்ல, நீங்கள் ஏன் இங்கு வந்துள்ளீர்கள், முள்ளிப்பொத்தானை வைத்தியசாலைக்கு செல்லுங்கள் என்றும் உங்களுக்கு மருந்து தர மாட்டேன் என்றும் கூறி நோயாளர்களை திருப்பி அனுப்பி கொண்டிருக்கின்றார்கள் என தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிராஜ் நகரில் இருந்து மருந்து எடுக்கச் சென்ற தாயிடம் குறித்த பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் தனக்கு முறைப்பாடு கிடைத்ததாக தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச். தாலிப் அலி கடந்த வாரம் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசிய போது உரிய ஆதாரத்துடன் தாருங்கள் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் நாடாளுமன்ற உருப்பினருமான அருண் ஹேமசந்திர தவிசாளரிடம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 5 கோரிக்கைகளை முன்வைத்து தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் - அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி