பயணப்பையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் - சந்தேகநபரின் மகளின் வாக்குமூலம் உள்ளிட்ட புதிய தகவல்கள்
கொழும்பு, டேம் வீதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவர் தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேநபரான உப பொலிஸ் பரிசோதகருடைய மகளின் வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அந்த உப பொலிஸ் பரிசோதகர் தனது வீட்டிற்குச் சென்ற நாளன்று இரவு அவரது அழுக்கான ஆடைகள் குளியலறை பேசினில் இருந்ததாகவும், ஆயினும் மறுநாள் காலை அந்த ஆடைகளை காணவில்லை எனவும் அவரது மகள் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த போதே தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகவும், அதன் பின் இரவு உணவை உட்கொண்டதாகவும் மகளின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை எரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் கொழும்பு ஊடகத்திடம் தெரவித்துள்ளார்.
எனவே சந்தேகநபரின் மகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்த போது வீடு திரும்பிய பின் இரவு உணவு உட்கொண்டு விட்டு எவருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி இருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவரது அழுக்கு உடை மற்றும் கொலை செய்த பெண்ணின் தலை ஆகியவற்றை அவர் எரித்திருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்ற போதும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
