இளைஞர்களை தாக்கிய சம்பவம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையான கண்டனம்
நாட்டையும், நாட்டுப் பொது மக்களையும் பாதுகாப்பாக வழிநடத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடத்தினால் பொது மக்கள் யாரை நாடிப் போவது? எனவே இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் இரு இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் ஊடக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர் மைலம்பாவெளி பகுதியில் நேற்றையதினம் இரு இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.
உண்மையிலே இந்த மூர்க்கத்தனமான தாக்குதலை முதலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
அதேவேளை மாவட்டத்திலே அப்பாவிகள் மீது இப்படி பொலிஸாருடைய அடாவடித்தனங்கள் இடம்பெற்று வருகின்றது. அண்மையிலே வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.
அதேவேளை இருதயபுரம் பகுதியில் ஒரு இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு சட்டம் இருக்கத்தக்கதாக மனித உரிமை மீறல்கள், மனிதக் குலத்துக்கு எதிரான சம்பவங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறே தொடர்ந்து பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இந்த தாக்குதல்களைப் பார்க்கும் போது சம்பவங்களை பொலிஸார் கையாளத் தெரியாது தங்களுக்கு ஏற்ற விதத்தில் கையாளுகின்றார்கள்.
எனவே மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் பொலிஸாரை சிறந்த முறையில் வழிநடாத்த தவறியதாலும், மனித உரிமையைப் பாதுகாத்தல், பொதுமக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் தொடர்பாக பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கப்படாதனாலேயே இவ்வாறு பொலிஸார் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ளுகின்றனர்.
எனவே நாட்டையும், நாட்டுப் பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடத்துகின்ற இந்த தரப்புக்கள் வந்து இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடிப் போவது என்பதுதான் இன்றைக்கு இருக்கின்றது.
வடக்கு, கிழக்கிலே பொலிஸார் நீண்ட நாட்களாக இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. எனவே இப்படியான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அதேவேளை
இப்படியான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது என பொலிஸ் மா அதிபர்
உறுதிப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
