கிண்ணியாவில் இருந்து வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கி வைப்பு
2024ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக பிரதேச செயலகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான ஊக்குவிப்பு இன்று (14) வழங்கி வைக்கப்பட்டது.
5000 ரூபாய் பெறுமதியான இரண்டு முத்திரைகள் (ரூபாய் 10,000.00) வெளிநாடு சென்றுள்ள பெண்களின் பிள்ளைகளை பராமரிக்கும் பாதுகாவலர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு வழங்கப்பட்டது.
முத்திரைகள் வழங்கும் நிகழ்வு
முத்திரைகள் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகமது கனி தலைமையில் இன்று இடம்பெற்றது.
2024ஆம் ஆண்டில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 பேர் முதல் தடவையாக கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியிடத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தெரிவு செய்யப்பட்ட ஏனையவர்களுக்கான முத்திரைகள் எதிர்வரும் தினங்களில் அவர்களை அழைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 47 நிமிடங்கள் முன்

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
