கோடிக்கணக்கில் விரயமாகியுள்ள வரிப்பணம்: அரசாங்கத்திற்கு சிக்கல்
வெளிநாட்டு பயிற்சித் திட்டங்களில் கலந்துகொள்ளாமல் அல்லது பாதியிலேயே திரும்பி, பல அரச வைத்தியர்கள், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று வரிப்பணத்தை கோடிக்கணக்கில் விரயமாகியுள்ளனர்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2009 முதல் 2023 வரை தேசிய வைத்தியசாலையின் ஒரு கதிரியக்க நிபுணர் மேற்கொண்ட 29 வெளிநாட்டுப் பயணங்களில், அனுமதியின்றி பயணம் செய்தமை மற்றும் பயிற்சிக்குச் செல்லாமல் கொடுப்பனவுகளைப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது.

முறைகேடுகள் குறித்து விசாரணை
வெளிநாட்டுப் பயிற்சிக்குப் பின்னர் கட்டாய சேவைக்குத் திரும்பாத வைத்திய அதிகாரிகளிடம் இருந்து 6 இலட்சம் ரூபாய் பிணைப்பணத்தை மீளப்பெறுவதில் சுகாதார அமைச்சு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து முழுமையான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri