தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் செயிரி வாரம் நிகழ்வு அங்குரார்ப்பணம்
அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தம்பலகாமம் பிரதேச செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.
அரசாங்க நிறுவனமொன்றில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு தமது கடமைகளை முறையாகவும், சுதந்திரமாகவும் நிறைவேற்றுவதற்கு உகந்த வகையில் சுத்தமானதும், சுகாதார பாதுகாப்புள்ளதுமான, ஆபத்துக்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு நிறுவனத் தலைவரினதும் பொறுப்பாகும்.
இடத்தை பயன்படுத்தல்
அத்தகைய சூழல் சேவைப்பெறுநர்களின் மத்தியிலும் அலுவலகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்பை பயனுள்ளதும் வினைத்திறனானதுமான முறையில் பயன்படுத்துவதற்கும், அலுவலர்களுக்கு அமைதியான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை உருவாக்குவதும் அவசியமாகும்.
அதற்கான ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக "செயிரி வாரம்" பிரகடனப்படுத்தி செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலகம்
அதற்கமைவாக இந்நிகழ்ச்சித்திட்டமானது தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01ஆம் தினத்திலிருந்து 04ஆம் தினம் வரையில் நடைமுறைப்படுத்தல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் பிரதேச செயலக கிளைத் தலைவர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan
