வவுனியாவில் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஆளுநரினால் திறந்து வைப்பு(Photos)
மக்கள் தொடர்பாடல் அலுவலகமானது வடமாகாண ஆளுநர் திருமதி பி.ஸ்.ம்.சாள்ஸ் அவர்களால் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் இன்று (26.07.2023) திறந்து வைக்கப்பட்டது.
வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்கள் 'சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது' இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்டுள்ளனர்.
இதற்கு அவர் பதிலளிக்கையில், வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் இது தொடர்பில் எனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
அலுவலகம் அமைக்கப்பட்டதன் நோக்கம்
வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அலுவலகமானது அமைக்கப்பட்டுள்ளமையுடன் வாரநாட்களில் மக்கள் தமது முறைப்பாடுகளை இவ் அலுவலகத்தில் தெரிவிக்க முடியும் என்பதுடன் மாதத்தில் இரு தடவைகள் ஆளுநர் இங்கு விஜயம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் , உள்ளூராட்சி அதிகாரிகள் , ஆளுநர் அலுவலக அதிகாரிகள் , நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல்-திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |