பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை திறந்துவைப்பு
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் சேதமடைந்திருந்தால், அவற்றின் பிரதிகளை இதுவரை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
குறித்த ஆவணங்களை இனிமேல் வவுனியாவில் அமைந்துள்ள வடக்கு வலய பதிவறையிலேயே பெற்றுக்கொள்ள முடியும். மேலும், உடனடியாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இவ்வலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.உமாமகேஸ்வரன், பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 19 மணி நேரம் முன்
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri