கிளிநொச்சியில் நாரா நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு
கிளிநொச்சி - பூநகரியில் (Kilinochchi - Poonakari) வடமாகாணத்திற்கான நாரா நிறுவனத்தின் உப அலுவலகமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (05.04.2024) காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
நீண்டகால வேலைத்திட்டம்
இதுவரை காலம் கொழும்பை தளமாக கொண்டு இயங்கிவந்த இந்த அலுவலகத்தை வடபகுதி கடற்றொழிலாளர்களின் கடலுணவு உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் அதன் மூலமான புதிய தொழில் வாய்ப்புக்கான வழி மூலங்களை கடற்றொழிலாளர்கள் அடைந்து கொள்வதற்குமாகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய மீன் உற்பத்தி வள மூலங்களை கடலில் கண்டறிவதுடன் புதிய கடற்றொழிலுக்கான முறைகள் அதற்கான தொழில்நுட்ப கல்வி மற்றும் அதன் வழியாக விருத்தி பெறும் கடற்றொழிலாளர் சமூகத்தை உருவாக்குதல் போன்ற நீண்டகால திட்டத்தை இலக்காக கொண்டே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |