நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்புவிழா (Video)
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் திறப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16.07.2023) மாலை 5.30 மணியளவில் நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவை தொடர்ந்து மந்திரிமனை அரங்கில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்துகொள்ளவுள்ளார்.
மரபுரிமைச் சின்னங்கள்
மேலும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் ஆறு திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் யு.ஏ.பந்துலஜீவவும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன், நல்லூர் பிரதேச செயலாளர் அ.எழிலரசி, யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டது.
மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயற்றிட்டம் இதுவாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam