பிம்ஸ்டெக் நிபுணர் குழுவின் அங்குராப்பண கூட்டம் இலங்கையில்
பொது நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான பிம்ஸ்டெக் (BIMSTEC - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) நிபுணர் குழுவின் அங்குராப்பண கூட்டம் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய ஒத்துழைப்பையும் பொருளாதார ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கில், வங்காள விரிகுடாவை சூழலுள்ள நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான அமைப்பாக பிம்ஸ்டெக் (BIMSTEC) நிறுவப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை
7வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில், பொது நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் உறுப்புநாடுகளுக்கு இடையில் சிறப்பு அறிவும் அனுபவங்களும் பரிமாறிக்கொள்ள வசதி செய்யும் வகையில் “பொது நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான நிபுணர் குழு” ஒன்றை அமைக்க இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் முன்மொழிந்திருந்தார்.

அந்த முன்மொழிவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவை அமைக்கும் கருத்துக் குறிப்புக்கு அனைத்து உறுப்பு நாடுகளின் அமைச்சர்களிடமிருந்தும் அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிபுணர் குழுவின் பணிச்சட்டம், பரிந்துரைகள் மற்றும் செயல்திட்டத்தைத் தயாரிக்கக்கூடிய வகையில் அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தை இலங்கையில் நடத்த பரிசீலிக்குமாறு பிம்ஸ்டெக் செயலாளரகம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மூலம் இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam