இலங்கை விமானப்படையின் பங்களிப்போடு வடமாகாணத்தில் ஆரம்பமான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை விமாப்படைத்
தளபதி
எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்"
வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று(10.02.2024) இடம்பெற்றது.
11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது.
சமூக பாதுகாப்பான இலக்கு
இதன்போது கருத்து தெரிவித்த இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன,
“இலங்கை விமானப்படையின் 73ம் ஆண்டு நிறைவையொட்டி சமூக பாதுகாப்பினை இலக்காக கொண்டு இந்த போட்டியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த போட்டியின் ஊடாக நட்புறவை வளர்ப்பதுடன், விமானப்படைக்கும் உங்களிற்கும் இடையில் நல்ல உறவை கட்டியெழுப்புவதுமே எமது இலக்காகும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |