இரண்டு வாரங்களில் 568 பேர் கோவிட் தொற்றினால் மரணம்
இரண்டு வார காலப் பகுதியில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக 568 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்யை தினத்துடன் முடிவடைந்த இரண்டு வார காலப் பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 327 பேர் ஆண்கள் எனவும், 241 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு வார காலத்தில் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் ஐந்து பேர் உள்ளடங்குவதாகவும் 30 முதல் 59 வயது வரையிலானவர்கள் 139 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60 வயதுக்கும் மேற்பட்ட 424 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வயது முதிர்ந்தவர்கள் கோவிட் பெருந்தொற்று காரணமாக அதிகளவில் உயிரிழக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இதுவரையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக மொத்தமாக 3959 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் முதலாம் அலையில் 13 பேரும், இரண்டாம் அலையில் 596 பேரும், மூன்றாம் அலையில் 3350 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
