தமிழர் தொடர்பில் ஐ.நா அறிக்கையில் இடம்பெற்ற பெரும் மாற்றம்! பின்னணியில் யார்?
ஐ.நாவின் கூட்டத்தொடரிலே இலங்கையைச் சர்வதேச தீர்ப்பாயத்தில் நிறுத்த வேண்டுமென்றும், அது மட்டுமல்லாது சர்வதேச புலன் விசாரணை பொறிமுறையொன்றை உருவாக்கி அங்கு நடந்த மற்றும் நடந்து கொண்டுள்ள இனப்படுகொலைக்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, 2019ம் ஆண்டிலிருந்து இந்த பொறிமுறைக்காக வேலை செய்து வருகிறோம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுதா தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலன் விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச புலன் விசாரணை தொடர்பில் 2019ம் ஆண்டிலிருந்தே பல்வேறு கலந்துரையாடல்கள் நடந்த வண்ணம் உள்ளன. பிரித்தானிய மட்டுமல்ல மேலும் பல நாடுகளுடன் கதைத்து இதனை ஒரு பேசுபொருளாகக் கொண்டுவந்துள்ளோம்.
ஆனால் தற்சமயம் சர்வதேச புலன் விசாரணை பொறிமுறை தொடர்பில் பார்க்கின்ற பொழுது அதற்கு ஒரு வருடத்துக்கு அவர்களுக்கு 13மில்லியன் செலவாகின்றது.
ஆகவே 26மில்லியன் தொடக்கம் 30மில்லியன் வரை செலவாகும் என்று சர்வதேச நாடுகள் அந்த பொறிமுறையை கொண்டுவர விரும்பவில்லை.
ஆனால் அது சார்ந்த ஒரு பொறிமுறையை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.