நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள்! (Video)
நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று (17.11.2022) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: கஜிந்தன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போன இளைஞர் நேற்று (17.11.2022) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு, பட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சூரியகுமார் என்னும் 20வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக காணாமல்போன நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (16.11.2022) குறித்த இளைஞனின் வீட்டிற்கு முன்பாகவுள்ள பாழடைந்த காணியிலிருந்த நீர்நிலையிலிருந்து குறித்த இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்தி: குமார்
இளைஞர் தற்கொலை
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியை சேர்ந்த செல்வராசா கஜமுகன் எனும் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று முன்தினம் (16.11.2022) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் அவரது நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுந்தகவல் மூலம் தெரிவித்ததையடுத்து இளைஞனை நண்பர்கள் தேடிய நிலையில் தர்மக்கேணி சனசழூக நிலையத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி: காண்டீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (68) வயதுடைய வினாசித்தம்பி தாமோதரம் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீன்பிடித்தொழிலினை மேற்கொண்டு தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த (16)ம் திகதி பிள்ளைகளுடன் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக உறவினர்கள் தேட ஆரம்பித்ததாகவும் பின்னர் பருத்திச்சேனை கன்னன்குடா ஆற்றுப்பகுதியில் கடற்தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் இன்று தேடிச்சென்ற போது ஆற்றுப்பகுதியில் உள்ள கண்ணா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி:குமார்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
