திருகோணமலையில் 23 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனவது முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் லைட் வீதி, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கந்தளாய் பகுதியிலுள்ள திருமணமான பெண்ணொருவரை கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்து கணவனால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் பெண் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri