வட மாகாணத்தில் மின்சார துண்டிப்பின் பின்னணியில் அரசாங்கம் செய்த சதி - மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

Social
By Independent Writer Mar 22, 2021 10:23 PM GMT
Report

இளம் தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் காணித்துண்டுகள் தமிழர்களிற்கு செல்லக்கூடாது என்பதற்காகவே காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களால் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், நிலைமாறு கால நீதியின் பிரகாரம் காணிகள் விடுவிக்கப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையடைந்திருக்கவில்லை.

குறிப்பாக காங்கேசன்துறை பகுதியில் விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட காணிகளில் இராணுவ முகாம்களும், பொலிஸாரின் விடுதிகளும் இருக்கிறது. அத்துடன் வடக்கில் கரையோர பகுதிகளை மையமாக வைத்து காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றது.

வடமாகாணத்திற்கான காணி ஆவணங்கள் யாழ் மாவட்ட செயலகத்திலிருந்த நிலையில்,வடமாகாணத்திற்குத் தொடர்பே இல்லாத இன்னொரு மாகாணத்திற்கு மாற்றப்பட்டமை பாரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி வடக்கில் திடீர் என்று மின்தடையென்று ஏற்படுத்தப்பட்டது. காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு கபளீகரம் செய்வதற்காகத் திட்டமிட்டே இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக இளம் தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஒரு இலட்சம் காணித்துண்டுகளிற்காக வடபகுதியில் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

எனவே அவற்றைப் பங்கீடு செய்து வழங்கினால் தமிழர்களிற்கே அந்த காணிகள் சென்றுவிடும் என்ற வகையில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த முதலாளிகளிற்கும், தனவந்தர்களிற்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டே அந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம். புதுக்காடு பகுதியில் 286 ஏக்கர் காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனவந்தர்களிற்கு வழங்கவுள்ளதாக அறிகிறோம்.

அத்துடன் கிளிநொச்சி இரணைதீவு விடுவிக்கப்பட்டாலும் அந்த மக்களிற்கான அடிப்படை வசதிகள் சரியான முறையில் பூர்த்திசெய்து கொடுக்கப்படவில்லை. அந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றது. எனவே அவற்றைப் பூர்த்தி செய்து இராணுவ அடக்குமுறை அற்ற நிலைமைக்கு வழிவகுக்க வேண்டும்.

போர் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை, போரால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளிற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை., அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள், என மனித உரிமைகளை மதிக்காது அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரல்கள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிக்க வைக்குமே தவிர ஒருசமாதான மனநிலையை உருவாக்கும் என்பது ஐயமே.

நிலைமாறு கால நீதி தொடர்பான பொறிமுறைகளை உருவாக்கும் அரசு அவற்றை நடைமுறைப்படுத்தத் தயங்குவது ஏன்? அல்லது மக்களது பிரச்சினைகளில் சாதகமாக செயல்படாமைக்கான காரணமென்ன? பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளைச் சுதந்திரமாக அவர்களது வகிபாகத்திலேயே பொருத்தமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன? இவற்றைக் கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நாட்டில் சுமூகமாக வாழ வழிவகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவர் ரத்தினசிங்கம் முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதிநிதி சந்திரலீலா, கிளிநொச்சி மாவட்டத்தின் வேதநாயகம் மன்னார் மாவட்டத்தின் நீதுசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US