நூதன முறையில் திருட்டு! நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்
தலவாக்கலை பிரதான நகரில் (24) நேற்று காலை நகைக்கடையொன்றிற்குள் நூதன திருட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நபரொருவர் நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்து நகைகளை வாங்குவது போல் கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு கையில் மறைத்து வைத்திருந்த போலி தங்க மோதிரத்தை காட்சிப்பெட்டியில் வைத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை
கண்காணிப்பு கமரா பதிவு
அதேசமயம், பெட்டியில் இருந்த உண்மையான தங்க மோதிரத்தை எடுத்து மறைத்து வைத்து, பின்னர் நீண்ட நேரம் நகைகளை பார்த்து விட்டு நகை வாங்காமல் மீண்டும் ஒரு தினத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

குறித்த நபர் சென்ற பிறகு கடை ஊழியர்கள் நகைகளை எண்ணி பார்த்த போது அதில் 50,000 ஆயிரம் பெறுமதியுடைய தங்க மோதிரம் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது . அத்துடன் அதேபோல் ஒரு போலியான மோதிரம் ஒன்றும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் நகை கடையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை ஆய்வு செய்த போது போலி மோதிரத்தை நூதன முறையில் வைத்து விட்டு தங்க மோதிரத்தை திருடியது தெரியவந்தது. இது குறித்து கடை நிர்வாகி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சந்தேகநபரின் CCTV காட்சிகளில் பதிவான புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.








