மொட்டுக்கட்சியில் இருந்து சஜித்துடன் இணைந்த முக்கிய எம்.பி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு மொட்டுக்கட்சியை பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய குடியரசு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் தீர்மானித்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜி.எல் பீரிஸ் ஆகியோர் முன்னதாக சஜித் தரப்புடன் கை கோர்த்திருந்தனர்.
அத்தோடு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க 27 அரசியல் கட்சிகள் அண்மையில் தீர்மானித்திருந்தன.
மனிதநேய மக்கள் கூட்டணி
மனிதநேய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி உள்ளிட்ட 27 கட்சிகளே இவ்வாறு இணைந்துள்ளன.
இதேவேளை, ஜயம்பதி விக்கிரமரத்ன உள்ளிட்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
