ஒரு வாரத்தில் நாட்டின் கடன் 300 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு
நாட்டின் மொத்த கடன் சுமை வெறும் ஒரு வாரத்திற்குள் 300 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி 16,500 கிகாவோட்ஸாக ஆக இருக்கும் எனவும்2030ஆம் ஆண்டில் இது 24,000 கிகாவோட்ஸாக ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

2050ஆம் ஆண்டில் மின்சார தேவை 45,000 கிகாவோட் வரை செல்லும் எதிர்பார்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்த நாளில் ஒரு அமெரிக்க டொலர் 300 ரூபாவாக ஆக இருந்ததாகவும், தற்போது ஒரு எல்.சி. (LC) திறக்க வேண்டுமானால் டொலரின் பெறுமதி 312 ரூபாவாக உயர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஏழு நாள்களில் மட்டும் நாட்டின் கடன் சுமை 300 பில்லியன் ரூபாவினால் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்கா மேலும் மின்சார கட்டணம் முதலீட்டில் ஏற்படுத்தும் விளைவுகளை விளக்கியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ் போன்ற ஆகிய நாடுகளில் ஒரு அலகு மின்சாரத்தின் விலை 16–20 ரூபா எனவும், தாய்லாந்து, மலேஷியா ஒரு அலகு மின்சாரம் 22 ரூபா எனவும், இலங்கையில் ஓரு அலகு மின்சாரம் 24 முதல் 25 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உயர்ந்த மின்சார கட்டணம் நாட்டின் முதலீட்டு சூழலுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri