தேசிய மக்கள் சக்தியில் திருடர்களுக்கு இடமில்லை : சுனில் ஹந்துனெத்தி
தேசிய மக்கள் சக்தியில் திருடர்களுக்கு இடமளிக்கப்படாது என கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி(Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை களவாடியவர்களுக்கு கட்சியில் இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தமது அரசாங்கம் இவ்வாறான திருடர்களை நிச்சயமாக தண்டிக்கும் எனவும் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சமுர்த்தி, அஸ்வெசும போன்ற திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும், செல்வந்தர்களின் பணம் ஏழைகளுக்கு வழங்கப்படும் எனவும் பிரசாரம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், செல்வந்தர்கள் மற்றும் வறியவர்களை இவ்வாறான பிரசாரங்களின் மூலம் அச்சமூட்ட சிலர் முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருவதாகவும் இதனை தீர்க்க தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |