கிளிநொச்சியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க மேலும் 15000 தடுப்பூசிகள் தேவை
கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கு இன்னும் 15000 கோவிட் - 19 தடுப்பூசிகள் தேவை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி 50000 பெறப்பட்ட போதிலும் இதுவரையில் 43196 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றும், நாளையும் ஏனைய தடுப்பூசிகள் முற்று முழுதாக வழங்கப்படும். அத்துடன் 15000 தடுப்பூசிகள் மேலதிகமாக தேவைப்படுகிறது.
அத்தோடு நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 68 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri