ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் தனிமைப்படுத்தலில்
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கோவிட் அச்சநிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியில் சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொலிஸாரால் கடந்த 19.04.2021 அன்று குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபருக்கு வவுனியா சிறைச்சாலையில் கடந்த 20.04.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு 23.04.2021 அன்று வெளியாகியுள்ளது.
இதில் சின்னச்சாளம்பனை சேர்ந்த குறித்த கைதிக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியினை கைது செய்த பொலிஸார், அவருடன் சம்பந்தப்பட்டவர்கள், நீதிமன்ற வாளகத்தில் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு 24.04.2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து குறித்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட
பொலிஸார் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
