யாழில் அன்னதான நிகழ்வு - பலர் தனிமைப்படுத்தலில்
யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில் இன்று அன்னதானம் வழங்க ஆயத்தமாகியிருந்த நிலையில் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 இற்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் முழு நேரப் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை குறித்த கோயிலில் அன்னதானம் வழங்குவதற்கான விசேட பூஜை ஏற்பாடாகியிருந்தது.
தெல்லிப்பழை பொலிஸார் மற்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிக்கு இது தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, இன்று காலை பொதுச் சுகாதரப் பரிசோதகர் மற்றும் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
கோயிலில் வழிபாடுகள் இடம்பெற்று அன்னதானம் வழங்கவும் ஏற்பாடாகியிருத்த
நிலையில் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கோயில் வழிபாட்டில்
ஈடுபட்டிருந்த 25 இற்கும் அதிகமானோர் குடும்பத்துடன்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.