மன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு ஆண்டகை தொடர்பில் பிரித்தானிய அரசியல் பிரமுகர்
மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தமை மிகவும் வேதனைக்குரியது என இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினரும், பிரித்தானிய தொழிற்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான John Mann தெரிவித்துள்ளார்.
நான் மன்னாருக்கு விஜயம் செய்த மிகவும் பயங்கரமான காலத்தில் இராயப்பு ஜோசப் ஆண்டகையையும் தமிழ் மக்களையும் சந்தித்துள்ளேன்.
அவர் மிக சிறந்த சாதனையாளர். தமிழ் மக்களின் உண்மை, மனித உரிமைகள், நீதி,கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்டார். சிறந்த மாமனிதர். உண்மையான ஆயர்.
அவரது வாழ்க்கை அனைவருக்கும் எப்போதும் முன்னுதாரணமாக இருக்கும். எனது நண்பனை நான் நினைவுகூருவேன் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியை பதிவு யெ்துள்ளார்.
இதேவேளை,மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் யாழ்.திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது பணியில் 25 வருடங்களை நிறைவு செய்து நேற்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam