கோவிட் தடுப்பூசி தொடர்பில் சீன தூதரகம் விடுத்த கோரிக்கை! - இணக்கம் வெளியிட்டது இலங்கை அரசு
சீனத் தயாரிக்கப்பட்ட "சினோபார்ம்" கோவிட் -19 தடுப்பூசிகள் இலங்கையில் செலுத்தப்படும் போது அதில் இலங்கையில் அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை , நாட்டில் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சீனத் தூதரகம் கோரியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவைகள் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்
இதேவேளை எத்தனை சீன பணியாளர்கள் தடுப்பூசிகளைப் பெறுவார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 6 இலட்சம் கோவிட் -19 தடுப்பூசி குப்பிகளை வழங்க சீனா இணங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri