ஐ.நாவில் இலங்கை தொடர்பில் ஆறு நாடுகள் முன்வைத்துள்ள யோசனை - நாளை விவாதம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஆறு நாடுகள் முன்வைத்துள்ள யோசனை நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அது தொடர்பிலான வாக்கெடுப்பு நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறும். இந்த ஆறு நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை இலங்கை முழுமையாக நிராகரித்துள்ளது.
சீனா, ரஷ்யா, பிலிப்பின்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவை 47 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan