நாய்களை சித்திரவதைக்கு உட்படுத்திய பிரித்தானிய விலங்கியல் நிபுணருக்கு10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பெருமளவான நாய்களை சித்திரவதைக்கு உட்படத்திய மற்றும் அதிர்ச்சியூட்டும் குற்றங்களை ஒப்புக்கொண்ட ஒரு புகழ்பெற்ற பிரித்தானிய விலங்கியல் நிபுணருக்கு அவுஸ்திரேலியாவில் 10 ஆண்டுகள் மற்றும் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
பிபிசி மற்றும் நெசனல் ஜியோகிராஃபிக் ஆகியவற்றின் தயாரிப்புகளில் பணியாற்றிய ஒரு முக்கிய முதலை நிபுணரான 53 வயதான அடம் பிரிட்டன் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
56 குற்றச்சாட்டுகள்
மிருகவதை மற்றும் விலங்கு கொடுமை தொடர்பான 56 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார் அதில் நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார்.
விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவதை அவர் புகைப்படம் எடுத்துள்ளார் அத்துடன் புனைப்பெயர்களைப் பயன்படுத்தி அது தொடர்பான காணொளிகளை இணையங்களில் பகிர்ந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீதிபதி ஜஸ்டிஸ் கிராண்ட் தனது தீர்ப்பில்,அடம் பிரிட்டன் செய்த மோசமான செயல்களை வன்மையாக கண்டித்தார் விலங்குகளை சித்திரவதை செய்வதில் அவர் பெற்ற "கலக்கமற்ற இன்பம்" "நோய்வாய்ந்தது” என்று ஜஸ்டிஸ் கிராண்ட் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பிரிட்டன் 2028 செப்டம்பரில் நீதிமன்றத்தால் விடுமுறையில் அனுமதிக்கப்படலாம் எனினும் அவர் வாழ்நாள் முழுவதும் பாலூட்டிகளை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு யார்க்சயரைச் சேர்ந்த பிரிட்டன், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் முதலைகளுடன் தனது பணிகளை தொடர அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்வதற்கு முன் தனது ஆரம்ப ஆண்டுகளை இங்கிலாந்தில் கழித்தார்.
பட்டம் பெற்ற உயர் தகுதி வாய்ந்த விலங்கியல் நிபுணரான பிரிட்டன், தனது துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
