உலகப்பந்தில் தன்னுடைய முகவரியை இழந்துள்ள தமிழர்கள் : சிறீதரன்(Photos)
உலகப்பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து நிற்கின்ற தமிழர்களின் வாழ்வைக் கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - மாங்குளத்தில் அமைந்துள்ள போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் வாழ்வைக் கட்டியெழுப்பும் மக்கள் நலன் காப்பகத்தின் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து நிற்கின்ற தமிழர்களின் வாழ்வைக் கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம். இன்று அரசியல் வாழ்வில் கூட கௌரவமான,நியாயமான,நேர்மையான நிலைகளிலிருந்து பின்தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
இந்த தீவில் தேசிய இனமாகிய தமிழ்த்தேசிய இனத்தினுடைய பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய சமூகக்கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.
இந்த பொருளாதாரத்தைக் கட்டி வளர்ப்பதில் உலகத்தின் மிகப்பெரிய டயஸ்போராவாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
தங்களால் இயன்ற பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி வல்லமைகளைப் பயன்படுத்தி இங்கு வாழும் மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வருவதை நாங்கள் காண்கின்றோம். ஈழத்தமிழர்களின் வாழ்வு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.இன்னும் சுந்தரமான வாழ்வு இல்லை.
நாங்கள் இலக்கு நோக்கிப் பயணிக்கக் கூடிய சக்தி
வாய்ந்தவர்களாக நாங்கள் இல்லை.கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நாங்கள்
முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
