தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் இம்ரான் எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பட்ட பாடநெறிகளைப் பின்பற்றும் திருகோணமலை மாவட்ட மாணவர்களது சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பலக்லைக்கழக உப வேந்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உப வேந்தருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொருளாதார நெருக்கடி
“தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப்பட்ட மாணவர்களை வசதிப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
வார இறுதி நாட்களில் ஒழுங்கு செய்யப்படும் இந்து வகுப்புகள் அடிக்கடி நடத்தப்படுவதால் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொள்வதில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு நாள் தங்கி இருந்து வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு நிகழ்நிலையில் (ஒன்லைன்) வகுப்புகள் நடத்த அல்லது திருகோணமலை மாவட்டத்தில் ஒரு கற்கை நிலையத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |