தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்பது போலி வாக்குறுதி: இம்ரான் எம்.பி
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்று தேர்தல் மேடைகளில் போலி வாக்குறுதி வழங்கப்படுகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று(16) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது நேரடியாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமம் : கஜேந்திர குமார்
ஊழல் சம்பந்தமான ஆவணங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் தற்போது வலுவான ஊழல் ஒலிப்பு சட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர் பௌசி போன்றோருக்கு அண்மையில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தன்னிடம் 400 பேரின் ஊழல் சம்பந்தமான ஆவணங்கள் இருப்பதாக கூறினார்.
அப்படியாயின் ஏன் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இது தொடர்பாக முறைப்பாடு எதுவும் செய்ய வில்லை என்று கேட்க விரும்புகின்றேன்.
தற்போது தகவல் பல தன்னிடம் இருப்பதாக கூறும் அவர், அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காது அதிகாரம் கிடைத்த பின் நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.
எனவே அதிகாரம் கிடைத்தால் கூட ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
உண்மையில் அவர் இந்நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும் என்று விரும்புவாராயின் தன்னிடம் உள்ள ஆதரங்களுள் சிலவற்றையாவது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் அவர் நடவடிக்கை தயாராகிறார் என்று நம்ப முடியும்.
இதனை விடுத்து மக்களை ஏமாற்றுவதற்காக வெறுமனே மேடைகளில் வாக்குறுதி வழங்குவதில் எந்த பலனும் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.