விவசாய சம்மேளன பிரதிநிதிகளுடன் இம்ரான் எம். பி கலந்துரையாடல்
கிண்ணியா (Kinniya) மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவைகள் பிரிவுக்கு உட்பட்ட விவசாய சம்மேளன உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (12) கிண்ணியா கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இதில் கலந்து கொண்டு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
முன்னாயத்த நடவடிக்கைகள்
இதன்போது, அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தால் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அதனை சீர் செய்ய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எதிர்காலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகளுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில், முன்னாள் நகர சபை உறுப்பினர் எம் எம். மஹ்தி, விவசாய சம்மேளன தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |