சிறுபான்மை சமூகத்திற்கு இதுவரை எந்த ஒரு தீர்வும் வழங்கப்படவில்லை: இம்ரான் மஹ்ரூப்
காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகள் தனது காலத்தில் நியாயமான தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் இதுவரை எந்த ஒரு தீர்வும் வழங்கப்படவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், தொடர்ச்சியான ஏமாற்றமே எஞ்சி வந்தது.
எனவே தமிழ் மக்கள் நியாயமான தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ள புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க முன் வர வேண்டும்.
இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதும் பொருத்தமற்றது.
ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரால் வெற்றி பெறவே முடியாது என்பது நிதர்சனமாகும்.
இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களது ஆதரவு இல்லாமல் ஒரு ஜனாதிபதியால் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து சிந்திக்க முடியாத நிலை ஏற்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
