அவுஸ்திரேலிய சூரியக்கதிர் திட்டத்துக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுப்பு
அவுஸ்திரேலிய முதலீட்டாளரான யுனைடெட் சோலார் எனர்ஜி SL லிமிட்டெட் நிறுவனத்தினால், பூநகரி குளத்தில் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்ட மெகா அளவிலான மிதக்கும் சூரிய சக்தி திட்டம் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை வழங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, இது அகற்றப்படும் என்று இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
சூரிய மின்னுற்பத்தி நிலையம்
இலங்கை சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அனுமதியை முதலீட்டாளர் பெறத் தவறியமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் நிபந்தனைகளின்படி, காலக்கெடுவிற்கு முன்னர் முதலீட்டாளர் அனுமதியைப் பெறத் தவறினால், திட்டத்தை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரிசையில் இருந்து, திட்டத்தை சபை அகற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது தொடர்பில் முதலீட்டாளருக்கு பல நினைவூட்டல்கள் இருந்தபோதிலும், அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த கட்டண நிலுவைத்தொகை 700 மில்லியன் ரூபாய்களாகும். மொத்தம் 1,727 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்தத் திட்டம், பூநகரி குளத்தில் 700 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆரம்பத்தில், அவுஸ்திரேலிய முதலீட்டாளர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் 500 மில்லியன் டொலர்களை முதல் தவணை செலுத்த திட்டமிடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |