இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டும் இம்ரான் கான்
பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், இலங்கை அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். கோவிட் நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவிட் நோய்த் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.
இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு தொடர்பில் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமை குறித்து இலங்கை அரசாங்கத் தலைமைகளுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
I thank the Sri Lankan leadership & welcome the Sri Lankan govt's official notification allowing the burial option for those dying of Covid 19.
— Imran Khan (@ImranKhanPTI) February 26, 2021
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri