முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்காது சென்ற இம்ரான் கான்

Pakistan
By Independent Writer Feb 28, 2021 08:41 PM GMT
Report

இலங்கையில் முன்னெடுக்கப்படும் கட்டாய தகன விடயத்தில் தலையீடு செய்யவும், ஜெனீவாவில் அரசாங்கத்தை ஆதரித்து, தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட வேண்டாம் எனவும் இலங்கை முஸ்லிம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் பாகிஸ்தான் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்வதற்கான உரிமைகளை வழங்குவதில் பாகிஸ்தான் பிரதமர் தலையீடு செய்ய வேண்டுமமென, முஸ்லிம் இடதுசாரி முன்னணி, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்ததில் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகம் குறிப்பாக மகிழ்ச்சியடைவதாகவும், கோவிட் தொற்றால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, இலங்கை அரசாங்கத்துடன் உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என தாம் நம்புவதாகவும் அந்த கோரிக்கை மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாட்டின் தலைவராக, தகனம் செய்வதற்கு பதிலாக அடக்கம் செய்வதன் கலாச்சார முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் தாம் கையளித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளதாக, புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவது "இலங்கை நண்பரின் வேலை அல்ல" என பாகிஸ்தான் பிரதமருக்கு ஒப்படைக்கப்பட்ட மகஜரில் சுட்டிக்காாட்டப்பட்டுள்ளதோடு, அவ்வாறு செயற்படுவது, தமிழ் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற நியாயமான சட்ட ரீதியான போராட்டத்திற்கு சேதம் விளைவிப்பதாக அமையும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"முஸ்லிம்களும் தமிழர்களும் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களையும், உண்மை மற்றும் நீதியைக் கோரி நிற்கும் கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்களையும் குறிப்பாக குறிப்பிட வேண்டும்.

முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ளூரில் நீதி கிடைக்காததால், இலங்கையில் நல்லிணக்கம் தடுக்கப்பட்டுள்ளது. நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான நாட்டை நோக்கிய எங்கள் பயனம் நிறுத்தப்பட்டுள்ளது.” பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை நிறைவு செய்து புதன்கிழமை பிற்பகல் நாடு திரும்பினார், கோவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக, இரு நாடுகளும் இதுவரை அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்னர், பிரதமர் இம்ரான்கான் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை ஊடகங்களுக்கும் வெளியிடப்படவில்லை. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் மகஜரை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் எம்.ஆர்.எம் பைசால், முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது எனக் குறிப்பிட்டார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த அரசாங்கம் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை வழங்க மறுத்து வருவதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் கோவிட் தொற்றல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு தலைவர் என்ற வகையில், இலங்கை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் அறிவுறுத்துமாறு, பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் உள்ள சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை வேறு எந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கத்தைப் போல ஏமாற்றவில்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தை ஆதரித்த பௌத்த தேரர்கள், ஒரு மரத்தை காப்பாற்றுவதற்காக வீதிகளில் இறங்கி தமது, ஆடைகளை போர்த்த வேண்டிய நிலைக்கு நாடு இன்று தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US