இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாரா..! போராட்டத்திற்கு தயாராகும் 20 இலட்சம் பேர்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆதரவாளர்கள் கவலை
இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என 3 இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும், PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 இலட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது.
இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam