மோடியுடன் விவாதம் நடத்த இம்ரான் விருப்பம்! (வீடியோ)
இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் முரண்பாடான உறவுகளை கொண்டிருக்கின்றன.
மூன்று போர்களிலும் ஈடுபட்டன.
காஸ்மீரின் வடக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி தொடர்பிலேயே இரண்டு நாடுகளுக்கும் முறுகல் நீடிக்கிறது.
இந்தநிலையில் நரேந்திர மோடியுடன்; விவாதத்தின் மூலம் முரண்பாடுகளை தீர்க்க முடிந்தால், துணைக்கண்டத்தில் உள்ள 1.7 பில்லியன் மக்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று இம்ரான் கான் குறிப்பிட்;டுள்ளார்.

எனினும் இம்ரான் கானின் கோரிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தான் அதன் வடக்கு அண்டை நாடான சீனாவுடன், ஏற்கனவே வலுவான பொருளாதார உறவுகளை பேணி வருகிறது.
இந்தநிலையில் யுக்ரெய்ன் பதற்றத்துக்கு மத்தியில் மொஸ்கோவிற்கு செல்லும் முன்னர் இம்ரான் கானின் கோரிக்கை வெளியாகியுள்ளது.

2018இல் இடம்பெற்ற சந்திப்பு இது!